700 ஏக்கரில் கரும்பு சாகுபடி சாத்தணஞ்சேரியில் மும்முரம் !
கரும்பு விளைச்சல் குறைந்து வரும் நிலையில், சாத்தணஞ்சேரி பகுதியில் மட்டும் 700 ஏக்கரில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-25 07:27 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் "உத்திரமேரூர்,:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது, சாத்தணஞ்சேரி கிராமம். பாலாற்றங்கரை அருகே உள்ள இக்கிராமத்தை சுற்றி முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்கள், எப்போதும் பசுமை போர்த்தி காட்சியளிக்கிறது. நெல், வேர்க்கடலை, வாழை, சோளம் மற்றும் தோட்டப் பயிர்கள் என, எந்த வகை பயிரிட்டாலும் செழிமையாக வளரக்கூடிய மண் வளம் கொண்ட பூமியாக சாத்தணஞ்சேரி விளங்குகிறது. எனினும், இப்பகுதி விவசாயிகள் கரும்பு பயிரிடுதலை முதன்மையாக கொண்டுள்ளனர். மதுராந்தகம் அடுத்த படாளத்தில் இயங்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, ஆண்டு தோறும் அரவைக்கு, சாத்தணஞ்சேரி பகுதியில்இருந்து கணிசமானஅளவுக்கு விவசாயிகள் கரும்புகளை அனுப்பிவருகின்றனர். தற்போது, சுற்றுவட்டார கிராமங்களில், கரும்பு விளைச்சல் குறைந்து வரும் நிலையில், சாத்தணஞ்சேரி பகுதியில் மட்டும் 700 ஏக்கரில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர்."