ஈரோடு பாராளுமன்றம் தொகுதியில் அண்ணா திமுக சார்பில் போட்டியிட ஆற்றல் அசோக்குமார் விருப்பமனு
ஈரோடு பாராளுமன்றம் தொகுதியில் அண்ணா திமுக சார்பில் போட்டியிட ஆற்றல் அசோக்குமார் விருப்பமனு அளித்தார்.
Update: 2024-02-23 06:20 GMT
ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அண்ணா திமுக சார்பில் போட்டியிட தலைமை கழகத்தில் ஆற்றல் அசோக்குமார் விருப்ப மனு அளித்தார் பாராளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அண்ணா திமுக சார்பில் போட்டியிடுவதற்கு விருப்பமுள்ளவர்கள் 21ஆம் தேதி முதல் மனு அளிக்கலாம் என்று முன்னாள் முதலமைச்சர் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்ததை தொடர்ந்து நேற்று முதல் விருப்ப மனுக்கள் அண்ணா திமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் பெற தொடங்கினர். இரண்டாம் நாளான இன்று ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், காங்கேயம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அண்ணா திமுக சார்பில் போட்டியிட கழக புரட்சித் தலைவி பேரவை மாநில துணை செயலாளரும் ஆற்றல் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான ஆற்றல் அசோக்குமார் விருப்ப மனு அளித்தார். ஆற்றல் அசோக்குமார் பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுவை அண்ணா திமுக தலைமை கழகத்தில் சமர்ப்பித்தார் விருப்ப மனு அளிப்பதற்கு முன்பாக ஆற்றல் அசோக்குமார், மாண்புமிகு தமிழக எதிர்க்கட்சி கொறடா எஸ்பி வேலுமணி எம்எல்ஏ அவர்கள் மற்றும் அண்ணா திமுக மாநில நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி எம்எல்ஏ, பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ, கே வி ராமலிங்கம் மற்றும் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் மகேந்திரன் எம்எல்ஏ ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.