துணை மேயர் வீட்டில் தாக்குதல் - போலீசாரையும் விசாரிக்க வேண்டும்

துணை மேயர் வீடு தாக்குதல் குறித்து காவல்துறை இன்ஸ்பெக்டரிடம் கூறினால் கூட்டத்துல இருக்கேன் அப்படின்னு சொல்கிறார். உள்ளூரில் இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரிகள் உட்பட அனைவரையும் விசாரிக்க வேண்டும் என சிபிஎம் மாநில தலைவர் கே பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2024-01-12 09:01 GMT

சிபிஎம் மாநில தலைவர் கே பாலகிருஷ்ணன் 

மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் இல்லத்தில் கடந்த 9ஆம் தேதி மாலை தாக்குதல் சம்பவம் குறித்து நேரில் பார்வையிட வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் துணை மேயர் அலுவலகம் வீடு மற்றும் வாகனங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார் .

*பின்னர் துணை மேயர் இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பில் பாலகிருஷ்ணன் பேசும்போது; மதுரை துணை மேயர் நாகராஜன் மக்களுக்கு அன்பு அறிமுகமானவர் இந்த பகுதியில் கடந்த 9ஆம் தேதி மாலை 6 மணி அளவில் வீடு மற்றும் வாகனங்களை தாக்கி சேதப்படுத்திய குற்றவாளிகளை காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை ஆய்வாளருக்கு துணை மேயர் மனைவி போன் செய்தபோது மீட்டிங்கில் இருக்கிறேன் என கூறினால் என்ன நியாயம்.

அரசியலில் வன்முறை இப்படிப்பட்ட அராஜக போக்கை என்றைக்குமே ஆதரிக்க கூடாது. வன்முறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரிக்கிற கட்சி அல்ல .இதை வன்மையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு சார்பில் நாங்கள் கண்டித்து இருக்கிறோம். ஏற்கனவே அரசினுடைய கவனத்திற்கு இதனை கொண்டு போய் இருக்கிறோம். இப்படிப்பட்ட மோசமான செயல் அதும் பகல் மாலை ஆறு மணிக்கு இவ்வளவு பெரிய சம்பவம், எப்படி இந்த மாவட்டத்தில் இருக்கிற காவல்துறை எப்படி செயல்படுகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. குற்றவாளிகள் சர்வ சுதந்திரமா நடமாடுற மாதிரி தான் தெரியுது.

மாலை நேரத்துல ஒரு வீட்டில் புகுந்து குடும்பத்தில் இருக்கிறவர்களை தாக்க முயன்றால் குடும்பத்தில் எப்படி இருக்கும் . எந்தவிதமான தயக்கமும் இல்லாம இவ்வளவு துணிச்சலா அவங்க செயல்படுறாங்கனா இதுக்கு எல்லாமே காரணம் இவர்களுக்கு பின்னாடி இவளோடு கைகோர்த்து இருக்கிற காவல்துறை இருக்குமோங்க சந்தேகம் தான் வருது. தாக்குதல் குறித்து காவல்துறை இன்ஸ்பெக்டரிடம் கூறினால் கூட்டத்துல இருக்கேன் அப்படின்னு சொல்றார்னா அப்படிப்பட்ட காவல்துறை அதிகாரி எப்படி அவருக்கு சம்பந்தமே இல்லாம இது நடந்திருக்குமா என்கிற சந்தேகம் தான் வருது. காவல்துறையும் மாவட்ட நிர்வாகம் ஒரு முழுமையான விசாரணை என்பது நடத்தப்படும் காவல்துறையில் இருக்கிற உள்ளூரில் இருக்கக்கூடிய அதிகாரிகள் உட்பட அனைவரையும் விசாரிக்கணும். ரெண்டு பேர் மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்

உடனடியாக அவர்களை கைது செய்து இந்த மாதிரி குற்ற நடவடிக்கை பின்புலத்தில் இருக்கிற நடவடிக்கையில் ஈடுபடக்கூடிய சக்திகளை முழுக்க முழுக்க கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை காவல்துறையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். ஏற்கனவே பல நேரங்களில் மதுரையில இது போன்ற சம்பவங்கள் நடந்து இருக்கலாம் இனிமேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெற கூடாது மேலும் இது குறித்து நான் முதலமைச்சரை சந்திக்க உள்ளேன். மேலும் இந்த சம்பவத்தின் பின்னணியில் கட்சி சார்ந்த நபர்கள் இருப்பதாக சொல்லப்படுவது என்பது கட்சி சார்ந்து அதனை பொருள்படுத்திக் கொள்ளக்கூடாது, சமூக விரோதிகள் என்று தான் பொருள் படுத்த வேண்டும். திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியுடன் பாஜக அரசை பாராளுமன்ற தேர்தலில் வீழ்த்த தேர்தலை சந்திக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் தமிழ் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்

Tags:    

Similar News