முன்விரோதம் காரணமாக தாக்குதல்
முன்விரோதம் காரணமாக தாக்கியதில் ஒருவர் பலத்த காயம். போலீசில் புகார் அளித்த நிலையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-20 09:38 GMT
போலீசார் விசாரணை
கம்பம் மூன்றாவது வார்டு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கும் கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்த கணேசன் என்பவருக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று கம்பம் அரசு கள்ளர் பள்ளி அருகே வைத்து கணேசன் ராஜாவை கடுமையாக தாக்கி விட்டு தப்பி ஓடினார். இதில் பலத்த காயம் அடைந்த ராஜா கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.