கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் தாக்குதல்
வேடசந்தூர் அருகே வடமதுரை பகுதியைச் சேர்ந்தவர் மகளின் திருமணத்திற்காக ரூ.7 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.பணத்தை திருப்பி கேட்டதால் அவரைத் தாக்கினார்.
Update: 2024-05-18 09:02 GMT
வேடசந்தூர் அருகே வடமதுரை பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரி கவிதா. அதே பகுதியைச் சேர்ந்த துளசி ராம் 4 வருடத்திற்கு முன்பு மகளின் திருமணத்திற்காக ரூ.7 லட்சம் கடன் வாங்கி உள்ளார். மேலும் காளீஸ்வரி கவிதா பணத்தை திருப்பி கேட்டதால் அவரைத் தாக்கி பணத்தை திருப்ப தர முடியாது என துளசி ராம் கூறியுள்ளார். காளீஸ்வரி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.