பெண்ணை இடைமறித்து தகாத வார்த்தை பேசி தாக்குதல்

பொங்கல் விழாவை கொண்டாடிவிட்டு ஊர் திரும்பிய பெண்ணை இடைமறித்து தகாத வார்த்தை பேசி தாக்கிய நான்கு பேரில் மூவர் கைது. ஒருவர் தலை மறைவு.

Update: 2024-01-18 09:46 GMT

பொங்கல் விழாவை கொண்டாடிவிட்டு ஊர் திரும்பிய பெண்ணை இடைமறித்து தகாத வார்த்தை பேசி தாக்கிய நான்கு பேரில் மூவர் கைது. ஒருவர் தலை மறைவு. திண்டுக்கல் மாவட்டம், செட்டி நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஞானஜோதி. இவரது மனைவி அன்னகாமாட்சி வயது 40. ஜனவரி 15ஆம் தேதி அன்ன காமாட்சி தனது குடும்பத்தினருடன், சொந்த ஊரான கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, வீரகவுண்டன் பட்டிக்கு பொங்கல் விழாவிற்காக சென்றுள்ளார். பொங்கல் விழாவை முடித்துவிட்டு மீண்டும் மாலை 6:40 மணி அளவில் ஊர் திரும்புவதற்காக அவர்களது டூவீலரில் கணவன்-மனைவி இருவரும் வந்து கொண்டிருந்தனர்.

இவர்களது வாகனம் சேர்வைக்காரன் பட்டி பஸ் ஸ்டாப் அருகே வந்த போது, திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சீகம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், தங்கவேல், வெற்றிச்செல்வன், கருப்பசாமி ஆகிய நான்கு பேரும், மது போதையில் வாகனத்தை இடைமறித்துள்ளனர். இதனை அன்னகாமாட்சி தட்டி கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த மது போதையில் இருந்த நான்கு பேரும், அன்னகாமாட்சியை தகாத வார்த்தை பேசி, கைகளால் தாக்கி, பின்னர் கையில் வைத்திருந்த கரும்புகளாலும் தாக்கி மிரட்டல் விடுத்து துன்புறுத்தி உள்ளனர். இதில் உள் காயம் அடைந்த அன்ன காமாட்சியை அருகில் உள்ள மயிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த சம்பவம் தொடர்பாக, அன்ன காமாட்சி கணவர் ஞானஜோதி பாலவிடுதி காவல் நிலையத்தில் அளித்த புகார் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மது போதையில் தகாத செயலில் ஈடுபட்ட தங்கவேல், வெற்றிச்செல்வன், கருப்பசாமி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய பிரகாஷ் தப்பி ஓடி தலை மறைவாகிவிட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் மேலும் இது தொடர்பாக பாலவிடுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், செட்டி நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஞானஜோதி. இவரது மனைவி அன்னகாமாட்சி வயது 40.

ஜனவரி 15ஆம் தேதி அன்ன காமாட்சி தனது குடும்பத்தினருடன், சொந்த ஊரான கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, வீரகவுண்டன் பட்டிக்கு பொங்கல் விழாவிற்காக சென்றுள்ளார். பொங்கல் விழாவை முடித்துவிட்டு மீண்டும் மாலை 6:40 மணி அளவில் ஊர் திரும்புவதற்காக அவர்களது டூவீலரில் கணவன்-மனைவி இருவரும் வந்து கொண்டிருந்தனர். இவர்களது வாகனம் சேர்வைக்காரன் பட்டி பஸ் ஸ்டாப் அருகே வந்த போது, திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சீகம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், தங்கவேல், வெற்றிச்செல்வன், கருப்பசாமி ஆகிய நான்கு பேரும், மது போதையில் வாகனத்தை இடைமறித்துள்ளனர். இதனை அன்னகாமாட்சி தட்டி கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த மது போதையில் இருந்த நான்கு பேரும், அன்னகாமாட்சியை தகாத வார்த்தை பேசி, கைகளால் தாக்கி, பின்னர் கையில் வைத்திருந்த கரும்புகளாலும் தாக்கி மிரட்டல் விடுத்து துன்புறுத்தி உள்ளனர்.

இதில் உள் காயம் அடைந்த அன்ன காமாட்சியை அருகில் உள்ள மயிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பாக, அன்ன காமாட்சி கணவர் ஞானஜோதி பாலவிடுதி காவல் நிலையத்தில் அளித்த புகார் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மது போதையில் தகாத செயலில் ஈடுபட்ட தங்கவேல், வெற்றிச்செல்வன், கருப்பசாமி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய பிரகாஷ் தப்பி ஓடி தலை மறைவாகிவிட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் மேலும் இது தொடர்பாக பாலவிடுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News