எடப்பாடியில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
எடப்பாடி அடுத்த கவுண்டம்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ சின்ன மாரியம்மன் கோவில் பண்டிகை நடைபெற்றது.
எடப்பாடி அடுத்த கவுண்டம்பட்டி ஸ்ரீ சின்ன மாரியம்மன் கோவில் திருவிழா நூற்றுக்கணகான பக்தர்கள் அலகு குத்தி, தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தினர்...
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கவுண்டம்பட்டி வன்னியர் ஸ்ரீ சின்னமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கி ஏராளமான பக்தர்கள் கங்கனம் கட்டி விரதம் இருந்து வந்தனர். பண்டிகை நாளான இன்று சரபங்கா ஆற்றங்கரையோரம் சுவாமியை அலங்கரித்து பூஜை நடைபெற்றது.
பின்னர் பூங்கரகம் எடுத்து முக்கியதெரு வழியாக ஸ்ரீ சின்ன மாரியம்மன் கோயிலுக்கு வந்தடைந்தனர். இதில் நூற்றுக்கணக்கான ஆண்கள் தேங்காய் அழகு, எலுமிச்சை அழகு, ஆம்னிகார் அழகு குத்தி இழுத்து வந்தும்,தலையில் தேங்காய் உடைத்து நேத்திக்கடன் செலுத்தினர்.
அதேபோன்று பெண்கள் நாக்கில் அலகு குத்தியும் 500-க்கும் மேற்பட்டோர் மாவிளக்கு தட்டம் எடுத்துவந்து, கிடா வெட்டி பொங்கல் வைத்து ஸ்ரீ சின்ன மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.