ஏலத்தொகையை குறைக்கக்கோரி போராட்டம்

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் ஏலத்தொகையை குறைக்கக்கோரி போராட்டம் நடைபெற்றது

Update: 2024-03-02 16:15 GMT

ஏலத்தொகையை குறைக்கக்கோரி போராட்டம்

சிவகங்கை இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் தமிழகம் முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்லும் நிலையில், பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில் திருவிழா கடைகள் அமைக்க ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பாக 6வது முறையாக இன்று நடைபெற்ற ஏலம் ரத்து செய்யப்பட்டது. ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஏல நிர்ணய தொகையை ரூ.1 கோடிக்கும் குறைவாக குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஏலம் கேட்காமல் இருந்தனர். இதனைத்தொடர்ந்து பின்னர் மீண்டும் மற்றொரு தேதியில் ஏலம் நடைபெறும் என ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில் கோயில் வளாகத்தில் கடைகள் வைத்திருக்கும் 50க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் ஏலத்தொகையை குறைக்க வேண்டுமென்று கோவில் முன்பாக அமர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
Tags:    

Similar News