ஜே.இ.இ நுழைவுத் தேர்வில் ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை
மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் சேர ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வில் பள்ளி மாணவர்கள் சாதனை.
Update: 2024-02-19 10:16 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை ஜே. இ. இ மெயின் நுழைவுத் தேர்வு அமர்வு - 1 ஜனவரி மாத இறுதி வாரத்தில் நடைபெற்றது. அதில் ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் அதியமான் பப்ளிக் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர். அதில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களான வித்தேஷ் ஜெயன் 99.00 , கிரிதரன் 98.75, கீர்த்தனா 98.68, நிஷாலினி 97.20, வினோத்குமார் 96.22, ரமணா 95.59, ரேஷ்வந்த் 94.34, சுபா 92.79, தர்ஷனா 91.99 மற்றும் தமிழகிலன் 91.83 ஆகியோர் பள்ளியில் முதல் 10 இடங்களை பிடித்து சாதனை புரிந்துள்ளனர். மேலும் 37 மாணவர்கள் 80 சதவீத மதிப்பெண்களைப் பெற்று மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி (N.ஐ.வு)., ஐ.ஐ.டி(ஐ.ஐ.வு)., ஐ.ஐ.ஐ.டி (ஐ.ஐ.ஐ.வு) ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் சேர தகுதி பெற்றுள்ளனர். பள்ளியின் முதல் பத்து இடங்களை பெற்ற மாணவர்களை சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் சீனி. திருமால் முருகன், செயலர் ஷோபா திருமால் முருகன், நிர்வாக அலுவலர் கணபதிராமன் மற்றும் அதியமான் பப்ளிக் பள்ளியின் முதல்வர் லீனா ஜோஷ் ஆகியோர் உற்சாகப்படுத்தி பரிசு வழங்கினர்.