ஆத்தூர்: ஏரியில் மண் கடத்தல் - இருவர் கைது, டிப்பர் லாரி,பொக்லைன் பறிமுதல்

ஆத்தூர் அருகே அய்யனார் கோவில் ஏரியில் மண் கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்பட்ட டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-04-28 09:09 GMT

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே முல்லைவாடி பகுதியில் அய்யனார் கோவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் முல்லைவாடி கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் தலைமயைிலான வருவாய்த்துறையினர், ஆத்தூர் நகர போலீசாருடன் ஆய்வு செய்தனர். அப்போது டிப்பர் லாரியில் மண் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பியோடினர்.

டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் இயந்திரம் ஆகிய இரு வாகனங்களை பறிமுதல் செய்தனர். ஆத்தூர் நகர போலீசார் நடத்திய விசாரனையில் மண் கடத்தலில் ஈடுபட்ட முல்லைவாடியைச் சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் பிரபாகரன் (33), நரசிங்கபுரம் தெற்குகாடு பொக்லைன் டிரைவர் குமார் (24), ஆகியோர் மீது, அனுமதியின்றி மண் கடத்தியதாக வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் மண் கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரியையும் பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News