ஆத்தூர் : உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தால் போக்குவரத்து பாதிப்பு
திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து ஆத்தூர் அருகே ராணிப்பேட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு,பொதுமக்கள் அவதியடைந்தனர்.;
Update: 2024-04-10 04:40 GMT
போக்குவரத்து பாதிப்பு
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார் அப்போது ராணிப்பேட்டை திடலில் தேர்தல் பரப்பறையில் ஈடுபட்ட போது பல்வேறு பகுதியில் இருந்து திமுகவினர் குவிந்ததால் ஆத்தூர் சாரதா ரவுண்டானா பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனால் இருசக்கர வாகன ஓட்டி நான்கு சக்கர வாகனம்,பேருந்துகளில் வெளியூர் பல்வேறு இடங்களுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினார்கள் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.