ஆத்தூர்: ரூ.1.28 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம்

ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் நடந்த ஏலத்தில் ரூ.1.28 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம் நடைபெற்றது.

Update: 2024-06-30 06:40 GMT

மஞ்சள் ஏலம் 

சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, தகள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 198விவசாயிகள் 1,387 மஞ்சள் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஆத்தூர், சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 12 வியாபாரிகள் மஞ்சளில் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்தனர். இ

தில் விரலி மஞ்சள் குவிண்டால் குறைந்தபட்சமாக 15,689 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 18,589 ரூபாய்க்கும், உருண்டை மஞ்சள் குறைந்தபட்சமாக குவிண்டால் 14,689 ரூபாய்க்கும் அதிகபட்சமாக 16,709 ரூபாய்க்கும், பனங்காலி மஞ்சள் (தாய் மஞ்சள்) குவிண்டால் குறைந்தபட்சம் 17,589 அதி பட்சமாக 22,689 ரூபாய் விலை போனது. 1387 மஞ்சள் மூட்டைகள், மொத்த குவிண்டால் 834.11 மூலம் ரூ.1 கோடியே 28 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

மேலும் கடந்த வாரம் 1981 மஞ்சள் மூட்டை விற்பனைக்காக வந்திருந்த நிலையில் தற்போது 1387 மூட்டையாக குறைந்த நிலையில் குவிண்டாலுக்கு 1000 ரூபாய் வரை விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

Tags:    

Similar News