பூக்கள் எடுத்துச்சென்ற பக்தர்கள் மீது தாக்குதல்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அதிகாலையில் பூக்கள் எடுத்துச்சென்ற பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.;

Update: 2024-03-26 06:05 GMT

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அதிகாலையில் பூக்கள் எடுத்துச்சென்ற பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் 3-வது வார பூச்சொரிதல் விழா நடைபெற்றது.இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களிலும் தட்டுகளிலும் சுமந்து பூக்களை எடுத்துச் சென்றனர். இந்நிலையில், ஸ்ரீரங்கம் மேலூரில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர்- சிறுமிகள் என ஏராளமான பக்தர்கள் பூக்களை எடுத்து வந்தனர். இந்நிலையில் நம்பர் 1 டோல்கேட் அருகே பளூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் ஒரு வேன் வந்துள்ளது.அந்த வேன் செல்வதற்க்கு தாமதம் ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து வேனில் வந்தவர்கள் கீழே இறங்கி பூக்கள் எடுத்துச்சென்ற பக் தர்களிடம் தகராறு செய்துள்ளனர்.

Advertisement

தகராறு முற்றியதில் வேனில் வந்த அடையாளம் தெரியாத 10 பேர் கொண்ட கும்பல் பக்தர்களை கட்டையால் தாக்கி உள்ளனர். இதில் ஸ்ரீரங்கம் மேலூர் வடக்கு தெருவை சேர்ந்த 27 வயதான அஜித் ,28 வயதான ஜோதி கண்ணன் ஆகிய 2 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து அவர்களு டன் வந்த பக்தர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத் துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து அஜித் கொடுத்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திய அடையாளம் நபர்களை தேடி வருகின்றர்.

Tags:    

Similar News