சேலத்தில் வீட்டுவாசலில் மது அருந்தியதை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்

சேலத்தில் வீட்டுவாசலில் மது அருந்தியதை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல் நடத்திய சிறுவன் உட்பட இருவர் கைது. தலைமறைவாகியுள்ள மற்ற இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2024-02-05 10:55 GMT

தாக்குதல் நடத்திய நபர் கைது

சேலம் கிச்சிபாளையம் களரம்பட்டி மிட்லேண்ட் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 41). இவரது வீட்டு வாசலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 பேர் கும்பலாக வந்துள்ளனர். பின்னர் அவர்கள் திடீரென மதுபாட்டில்களை எடுத்து வாசலில் வைத்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது வெளியே சத்தம் கேட்டதால் வீட்டிற்குள் இருந்து வந்த ரஞ்சித் ஏன் வாசலில் அமர்ந்து மது அருந்துகிறீர்கள் என்று தட்டி கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் 4 பேரும் மது போதையில் ரஞ்சித்திடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ரஞ்சித்தின் உறவினர் மூர்த்தி (25) வந்து அவர்கள் 4 பேரையும் தாக்கியதாக தெரிகிறது. மது போதையில் இருந்த 4 பேரும் ரஞ்சித், மூர்த்தி ஆகியோரை சரமாரியாக தாக்கினர். இதில் மூர்த்திக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். படுகாயம் அடைந்த மூர்த்தி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசில் ரஞ்சித் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குகை பஞ்சதாங்கி ஏரி பகுதியை சேர்ந்த ஆனந்த் (20), லோகேஷ், காளி மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேர் மீது தாக்குதல் நடத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ஆனந்த் மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News