பல்லடத்தில் செய்தியாளர் மீது தாக்குதல்: காவலர் கைது

பல்லடத்தில் செய்தியாளர் கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் நுண்ணறிவிப்புரிவு காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2024-03-08 13:16 GMT

கைது செய்யப்பட்ட காவலர்

 திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சியில் தாலுக்கா  செய்தியாளராக நேச பிரபு என்பவர் பணியாற்றி வந்த நிலையில். கடந்த மாதம் 10 பேர் கொண்ட நபர்களால் அறிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு சரமாரியாக வெட்டப்பட்டதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்ப்ட்டு வரும் நிலையில்,

இது குறித்து திருப்பூர் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் உத்தரவின் பேரில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பிடிக்கும் முயற்ச்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தநிலையில்திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவு காவலராக பணியாற்றி வந்த  ராஜாசுபின் என்பவருக்கும் செய்தியாளர் நேச பிரபு என்ப்வருக்கும்  முன் விரோதம்  இருந்த வந்ததாக கூறப்படுகிரது.

Advertisement

இதன் காரணமாக காவலர்  ராஜாசுபின்  கூலிப்படையை ஏவிவிட்டு  செய்தியாளர் நேசபிரபுவை   கொலை வெறி தாக்குதல் நடத்தியது போலீசார் விசாரனையில் தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்து வந்த  நுண்ணறிவு பிரிவு காவலர்  ராஜாசுபினை தனிப்படை.போலீசார் இன்று கைது செய்தனர். இதனிடையே    நுண்ணறிவு பிரிவு காவலர் ராஜா சுபினை   மாவட்ட காவல் துறை  பணியிடை நீக்கம் செய்யப்படுள்ளது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News