இலங்கை தமிழர் முகாமில் வாலிபர் மீது தாக்குதல்: தந்தை, மகன் கைது

இலங்கைத் தமிழர் முகாமில் உள்ள வாலிபர் மீது தாக்குதல் நடத்திய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update: 2024-05-27 14:57 GMT

காவல் நிலையம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் - காட்பாடி ரோடு காந்திநகர் பகுதியில் இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமில் வசிப்பவர் சுமன் (32), கூலிவேலை செய்து வருகிறார்.இதே முகாமில் சுமனின் சித்தப்பா ரவிச்சந்திரன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சுமன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவிச்சந்திரனின் மகன் அருணை குடிபோதையில் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவின் போது ரவிச்சந்திரனின் மகள், மருமகன் ஆகியோரையும் குடிபோதையில் சுமன் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார்.   

Advertisement

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் அருணை ஆபாசமாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அருண் மற்றும் அவரது தந்தை ரவிச்சந்திரன், தாயார் உதயகலா ஆகியோர் சுமனை தாக்கியதாகவும், இதில் பலத்த காயமடைந்த சுமனை குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும்,

பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண் (23) மற்றும் அவரது தந்தை ரவிச்சந்திரன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News