வேதாரண்யத்தில் கோவில் தேரோட்டத்திற்கு பாஸ் கேட்டு தாக்குதல்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கோவில் தேரோட்டத்திற்கு பாஸ் கேட்டு கோவில் தேர் செய்பவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-02-22 06:48 GMT
கோவில் பாஸ் கேட்டு தாக்குதல் நடத்தியவர் கைது

நாகை மாவட்டம், வேதாரணியம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கீழ சேது ரஸ்தா பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் மாரிச்சாமி வயது 43 இவரது குடும்பத்தினர் கோவிலுக்கு தேர் செய்து தரும் பணியை பரம்பரை பரம்பரையாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வேதாரண்யத்தில் நேற்று நடைபெற்ற மாசிமாக தேரோட்டத்திற்காக வேதாரண்யேஸ்வரர் கோவில் விழா குழுவினர் 30 சிறப்பு பாஸ்களை மாரிசாமிக்கு கொடுத்துள்ளனர். பிப்ரவரி 20 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு மாரி சாமி வீட்டிற்கு வந்த வேதாரண்யம் முதலியார் குல தெரு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் மகேஸ்வரன் வயது 44 என்பவர் ஒரு பாஸ் தருமாறு கேட்டு உள்ளார்.

அதற்கு மாரிச்சாமி தன்னிடம் இருந்த பாஸ் தீர்ந்துவிட்டது என கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மகேஸ்வரன் மாரிச்சாமியை ஆபாசமாக திட்டி கம்பால் தாக்கி வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை அடித்து உடைத்து சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளார்.

இது தொடர்பாக மாரிச்சாமி வேதாரண்யம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மகேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News