சேலத்தில் வாலிபரை தாக்கி பணம் பறிக்கும் முயற்சி
சேலம் அழகாபுரம் பெரிய புதூர் அருகே வாலிபரை தாக்கி பணம் பறிக்கும் முயற்சி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் அழகாபுரம் பெரிய புதூர் போயர் தெருவை சேர்ந்தவர் அஜித்குமார் (25). இவர் நேற்று மதியம் மயான கொள்ளை நிகழ்ச்சிக்காக பெரியபுதூர் சுடுகாட்டிற்கு சென்றிருந்தார். அங்கு 2 பேர் வந்து, அஜித்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை எனக்கூறவும், உருட்டுக்கட்டையால் முகத்தில் கடுமையாக தாக்கினர்.
அதில், அஜித்குமார் பலத்த காயமடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுபற்றி அழகாபுரம் இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அஜித்குமாரை தாக்கியது, பெரியபுதூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (22), சந்தோஷ்குமார் (20) எனத்தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.