வானூர் அருகே நிலத்தை அபகரிக்க முயற்சி: எஸ்.பி அலுவலகத்தில் புகார்
வானூர் அருகே நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது .
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள இடையன்சாவடி கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் தனது உறவினர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத் தார். அம்மனுவில் கூறியிருப்பதாவது:- இரும்பை கிராமத்தில் உள்ள எங்கள் நிலத்தை எனது தந்தை விற்றுவிட்டார்.
ஆனால், தற்போது வரை இந்த நிலம் எங்களின் அனுபவத்தில் உள்ளதால் அவர் விற்றது தெரியவில்லை. இது தெரிந்ததும் நிலத்தை கிரையம் பெற்றுள்ள வெளிநாட்டில் உள்ளவ ருக்கு எதிராக நானும், எனது தங்கையும்பாக உரிமைக்கோரி நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கு திண்டிவனம் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில்,
இடையன்சாவடி பகுதியில் நிலம் பறிக்கும் வேலையை செய்யும் ஒருவர், அந்த நிலத்தை கிரையம் பெற்றதாக வும், வழக்கை வாபஸ் பெறக்கோரியும் எங்களை மிரட்டி வருகி றார். இதுபற்றி ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே நிலத்தை அபகரிக்கும் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மனு வில் கூறியிருந்தனர்.