அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி
அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-06 08:39 GMT
தீக்குளிக்க முயன்ற பெண்
அரியலூர் மாவட்டம் வீராக்கண் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி என்பவரின் மனைவி வசந்தா. இவர் தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட போலீசார் உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
பின்னர் அவரிடம் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள இரும்பு வேலிகளை, அவரது உறவினர்கள் தொடர்ந்து அகற்றி வருவதாகவும், இதுகுறித்து இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
இதனையடுத்து ஜெயங்கொண்டம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு செல்லுமாறு கூறி போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.