வார சந்தை கடைகள் ஏலம் !
உப்பிடமங்கலம் பேரூராட்சியில் வார சந்தை கடைகள் ஏலம் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-05 11:41 GMT
கடைகள் ஏலம்
கடைகள் ஏலம்
கடைகள் ஏலம்
உப்பிடமங்கலம் பேரூராட்சியில் வார சந்தை கடைகள் ஏலம் நடைபெற்றது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட, உப்பிடமங்கலம் பேரூராட்சியில் அண்மையில் ரூபாய் 5.75 கோடி மதிப்பீட்டில், வார சந்தை மற்றும் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. தற்போது வார சந்தையில் உள்ள கடைகளுக்கு ஏலம் விடும் பணி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் திவ்யா மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் பானு ஜெயராணி ஆகியோர் தலைமையில் வார சந்தை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 24 கடைகளுக்கு ஏலம் விட்டனர். கடை நடத்த விரும்பிய அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குறைந்தபட்சம் மாத வாடகையாக ரூ.3500 இல் இருந்து ரூபாய் 6 ஆயிரம் வரை கடை அமைந்துள்ள இடத்தை பொறுத்து ஏலம் கேட்டு எடுத்தனர். ஒரு சில கடைகள் ஏலம் விட்டபோது,ஏலம் கோர யாரும் இல்லாததால், அந்த குறிப்பிட்ட கடைகள் மட்டும் மறு ஏலத்திற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.