ஆடி மாத பவுர்ணமி திருவண்ணாமலைக்கு 50 சிறப்பு பேருந்துகள்

Update: 2024-07-18 06:52 GMT

சிறப்பு பேருந்துகள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஆடி மாத பெளர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு நாளை கிளாம்பாக்கத்தில் இருந்து 50 ஏ.சி. பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 260 பஸ்களும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) 585 பஸ்களும் இயக்கப் பட உள்ளன.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் தலா 45 பஸ்கள் என 90 பஸ்களும் இயக்கப்பட உள்ளன. மேலும், பெங்களூா், திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 50 ஏ.சி. பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், நெல்லை, நாகர்கோயில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து பயணிகள் சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலும் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளிக்கிழமையான நாளை 7 ஆயிரத்து 613 பயணிகளும், நாளை மறுநாள் 4 ஆயிரத்து 354 பயணிகளும், ஞாயிற்றுக்கிழமையில் 8 ஆயிரத்து 142 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News