கார் மீது ஆட்டோ மோதி விபத்து

அம்மனூர் அருகே கார் மீது ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டதில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2024-06-28 09:45 GMT

விபத்து 

அரக்கோணத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அம்மனூர் - மேல்பாக்கம் இடையே சென்றபோது எதிரே வந்த காரின் மீது ஆட்டோ மோதியது. இதில் ஆட்டோ முன்பகுதி முழுவதும் நொறுங்கி சேதமடைந்தது. இதில் மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்து படுகாயம் அடைந்த 3 மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் தமிழினி (வயது 12) என்ற மாணவியும் அவரது தம்பி 5-ம் வகுப்பு படிக்கும் மோனிஷ் (வயது 10) என்ற மாணவனுக்கும் டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் பலத்த காயம் அடைந்த அரக்கோணம் உப்பரபாளையம் பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மோனிஷ்ராஜிக்கு (வயது 13) முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அரக்கோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடி தலைமறைவான ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News