ஆட்டோ ஓட்டுனர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !
எல்லை அளவை உயர்த்தி தர வலியுறுத்தி உதகை ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.;
Update: 2024-03-07 06:53 GMT
எல்லை அளவை உயர்த்தி தர வலியுறுத்தி உதகை ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிர்ணயம் செய்யப்பட்ட 15 கீ.மி., எல்லை அளவை 30கி.மீ., தூரமாக உயர்த்தி தர வேண்டும் என அனுமதி கேட்டு பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று அரசு சார்பாக சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்திருந்ததை அடுத்து குன்னூர், கோத்தகிரி, ஊட்டி நிர்வாகிகள் மாலை 6 மணி வரை காத்திருந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. எனவே, கோரிக்கையை அலட்சியம் செய்து, காலதாமதம் ஏற்படுத்துவதை கண்டிக்கும் விதமாக, நேற்றிரவு முதல் ஆட்டோக்களை இயக்காமல், இன்று உதகை ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கத்தகனர் ஊட்டி எ.டி.சி., சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.