மாவட்ட அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா
பரமத்தி வேலூர் தாலுகா சோழசிராமணியில் மாவட்ட அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பரமத்தி வேலூர் தாலுகா சோழசிராமணி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி 2 நாட்களாக இரவு பகலாக நடைபெற்றது. கபடி போட்டி தொடக்க விழாவிற்கு தி.மு.க நாமக்கல் மேற்கு மாவட்ட கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை தலைவர் தளபதி சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
கபிலர்மலை ஒன்றிய தி.மு.க. துணை செயலாளரும், தி.மு.க. ஒன்றிய கவுன்சிலருமான வளர்மதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை தலைவர் கே.எஸ்.மூர்த்தி கலந்துகொண்டு கபடி போட்டியை தொடங்கி வைத்தார்.
கபிலர்மலை ஒன்றிய தி.மு.க. செயலாளரும், தி.மு.க. ஒன்றிய கவுன்சிலரு மான சண்முகம் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். கபடி போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கபடி அணிகள் கலந்து கொண்டு விளையாடினார்கள்.
இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. கபடி போட்டியில் முதலிடம் பெற்ற பரமத்தி வேலூர் அருகே வெங்கரை கரிகாலன் அணிக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், சுழற் கோப்பையும், 2-வது இடம் பிடித்த கரூர் சூர்யா நினைவு அணிக்கு 2-வது பரிசாக ரூ.8 ஆயிரமும், சுழற் கோப்பையும், 3-வது இடம் பிடித்த ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் செல்வம் நினைவு அணிக்கு மூன்றாவது பரிசாக ரூ 6000 சுழற் கோப்பையும். நான்காம் இடம் பிடித்த சோழசிராமணி அருகே மொளசி நெப்போலியன் பாய்ஸ் நான்காவது ரூ.4 ஆயிரமும் அணிக்கு பரிசாக சுழற் கோப்பையும் வழங்க ப்பட்டது.
கபடி போட்டியில் சிறப்பு அழைப்பாளர்களாக சுள்ளிப்பாளையம் ஊராட்சித் தலைவர் வளர்மதி தண்டபாணி. ஜமீன் இளம் பள்ளி ஊராட்சி தலைவர் அபிராமி தங்கவேல் மற்றும் ஊராட்சி தலைவர்கள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பா ளர்கள், பல்வேறு அணி பொ றுப்பாளர்கள். பொதுமக்கள் கலந்து கொண்டனர்.