பட்டுக்கோட்டை: "மாமா மேடைக்கு வாங்க"... சிரிப்பலை

பட்டுக்கோட்டையில் சாதனைப் பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.

Update: 2024-05-05 13:11 GMT

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில், 'உமன்ஸ் பாய்ண்ட் இன்ஸ்டிடியூசன் ஆப் பேஸன் டெக்னாலஜி' அமைப்பு சார்பில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு, அமைப்பின் நிர்வாக இயக்குநர் பிரபா தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.பாஸ்கர், மருத்துவர் தேவி ராஜேந்திரன், சின்னத்திரை கலைஞர் சசிலயா, அழகுக்கலை நிபுணர் பரமு, கல்வி, வேலை வாய்ப்பு நிறுவன உரிமையாளர் ஜெ.சத்தியமூர்த்தி ஆகியோர், அழகுக்கலை, தொழில்துறை, சமூக செயல்பட்டார்கள் என பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 50 பெண்களுக்கு விருது, பதக்கம், சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினர். நெகிழ்ச்சி  நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் சரளா விருது பெறும் போது, "ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னரும், சகோதரனோ, தந்தையோ, கணவரோ என ஒரு ஆண் இருப்பார். எனது வெற்றிக்குப் பின்னால் என் கணவர் இருக்கிறார்" என்றவர், மேடையில் பரிசு வழங்கிக் கொண்டிருந்த காவல் துணை கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று, கூட்டத்தில் அமர்ந்திருந்த தனது கணவரை நோக்கி," மாமா மேடைக்கு வாங்க" என்று அழைத்து, அவர் கையால் பரிசு பெற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் அரங்கத்தையே சிரிப்பலையில் ஆழ்த்தியது. 

Tags:    

Similar News