சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டத்தில் ஊழியர்களுக்கு விருது

சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த தபால் ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

Update: 2024-06-28 11:11 GMT

விருது வழங்கல்

சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டம் சார்பில் தபால் ஊழியர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு விருது வழங்கும் விழா சேலம் பொன்னம்மாபேட்டையில் நடந்தது. கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். 

 விழாவில் தபால் அதிகாரி சுவாதி ரத்னா, முன்னாள் முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் அருணாச்சலம், மேற்கு கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் பார்த்திபன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கடந்த நிதியாண்டில் சிறப்பாக பணிபுரிந்த தபால் ஊழியர்களை பாராட்டி விருதுகள் வழங்கினர்.

நிகழ்ச்சியில், கிழக்கு கோட்ட அஞ்சலக துணை கண்காணிப்பாளர் தனலட்சுமி, சேலம் தலைமை தபால் அலுவலக முதுநிலை அஞ்சல் அதிகாரி அஜித்குமார், அஞ்சலக உதவி கண்காணிப்பாளர்கள் பரமேஸ்வரன், மஞ்சு, ஆத்தூர் அஞ்சலக ஆய்வாளர் சரவண சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News