முதல்வரிடம் விருது - வட்டாட்சியருக்கு ஆட்சியர் பாராட்டு

தமிழக முதல்வரிடம் விருதுபெற்ற திருவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமாருக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார். ;

Update: 2024-02-01 05:51 GMT
முதல்வரிடம் விருது - வட்டாட்சியருக்கு ஆட்சியர் பாராட்டு

ஆட்சியரிடம் வாழ்த்து 

  • whatsapp icon
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் 17.12.2023 மற்றும் 18.12.2023 ஆகிய தேதிகளில் பெய்த அதிதீவிர கன மழையினால் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது உதவிய திருவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமாருக்கு தமிழ்நாடு அரசின் வீரதீர செயலுக்கான அண்ணா விருதினை வழங்கினார்.  இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  அவ்விருதினை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதியிடம், வட்டாட்சியர் சிவக்குமார் காண்பித்து வாழ்த்துபெற்றார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்.ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், துணை ஆட்சியர் (பயிற்சி) பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News