அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரிக்கு விருது !

சர்வதேச வளர்ச்சிக்கு ஏற்ப கல்வியில் செயல்பாடுகளை சிறந்த முறையில் நடத்தி வருவதை மையப்படுத்தி விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனைக்கு ஆண்டின் சிறந்த அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி என்ற விருதும் வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-08 10:00 GMT

விருது

இ.பி.ஜி. நிறுவனம் கல்வியியல் சார்ந்த ஆலோசனைகளையும், மதிப்பீடுகளையும் வழங்கி வருகிறது. அதனடிப்படையில் ‘இந்தியா வாரம்-2024’ என்ற கல்வியியல் சார்ந்த மாநாட்டினையும், கல்வியில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் நோக்கிலும் உலகின் முன்னணி பல்கலைக்கழகமான இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் சமீபத்திய கல்வியில் புதுமை மாநாட்டினை நடத்தியது. மாநாட்டில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து கல்வியாளர்கள் பங்கேற்றனர்.

இதில் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் டீன் செந்தில்குமார் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு ‘சர்வதேச மயமாக்குதலில் இந்திய கல்வி’ என்ற தலைப்பில் பேசினார். மேலும் சர்வதேச வளர்ச்சிக்கு ஏற்ப கல்வியில் செயல்பாடுகளை சிறந்த முறையில் நடத்தி வருவதை மையப்படுத்தி விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனைக்கு ஆண்டின் சிறந்த அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி என்ற விருதும் வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. விருது கிடைப்பதற்கு சிறப்பாக பங்களிப்பாற்றிய துறையின் டீனுக்கு வேந்தர் கணேசன், துணைத்தலைவர் அனுராதா கணேசன் மற்றும் துறை பேராசிரியர்கள் தங்களின் வாழ்த்தினையும், பாராட்டினையும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News