ரத்தானம் அளித்த தன்னார்வலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கல்

அரியலூரில் ரத்தானம் அளித்த தன்னார்வலர்கள் 24 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.;

Update: 2024-06-25 10:49 GMT

அரியலூர் ஆட்சியர்

 அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா, 2023}2024 ஆண்டுகளில் நடைபெற்ற முகாம்களில், ரத்தானம் அளித்த தன்னார்வலர்கள் 24 பேருக்கும், உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப்பெற்ற அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியை சேர்ந்த 6 மாணவர்களுக்கும் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் நினைவு கேடயங்களை வழங்கினார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில், இந்த ஆண்டின் உலக குருதி கொடையாளர் தினத்தின் கருப்பொருளாக “ரத்த நன்கொடையின் 20 ஆம் ஆண்டு கொண்டாட்டம், ரத்த கொடையாளர் அனைவருக்கும் நன்றிகள் என்ற பொருளை மையமாக கொண்டு நடைபெற்று வருகிறது.

Advertisement

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த மையத்தில் கடந்த ஆண்டு 3846 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டு 7000 மேற்பட்ட ரத்தம் மற்றும் ரத்த கூறுகள் மருத்துவமனை உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள், எலும்பு அறுவை சிகிச்சை,

பொது அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம், அவசர மற்றும் விபத்து பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, அவசர அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது என்றார். முன்னதாக அனைவரும் ரத்தானம் செய்வதன் அவசியம் குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கலைவாணி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அஜித்தா, மாவட்ட திட்ட மேலாளர் சுமதி, அவசர சிகிச்சை தலைமை மருத்துவ அலுவலர் எஸ்.கண்மணி,

துணை நிலைய மருத்துவ அலுவலர்கள் அறிவுச்செல்வன், ஜெயசுதா, குருதியேற்றுத்துறை தலைவர் சகுந்தலா, குருதி வங்கி மருத்துவ அலுவலர் கே.சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News