போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

விழுப்புரத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை நிர்வாகிகள் வழங்கினார்

Update: 2024-04-23 04:06 GMT

விழுப்புரத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை நிர்வாகிகள் வழங்கினார்


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் விழுப்புரத்தில் தேசிய அறிவியல் தின கருத்தரங்கம், சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம் மற்றும் அறிவியல் தினம், மகளிர் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பா ளர் முருகன் வரவேற்றார். சுமதி ராஜ்குமார் அறிக்கை சமர்பித் தார். மாவட்ட செயலாளர் பாலமுருகன் அறிமுக உரையாற்றினார்.

துணைத்தலைவர்கள் அய்யனார், தண்டபாணி, மாநில பொதுக் குழு உறுப்பினர் சண்முகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் முனுசாமி கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசு வழங்கினார். விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுச்செயலாளர் முகமது பாதுஷா எழுத்தாளர்கள் ஆயிஷா, நடராஜன், மாநில செயலாளர் ஸ்டீபன்நாதன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கன்யா ரமேஷ், அன்பழகன் மற்றும் அறிவியல் இயக்க மாவட்ட நிர்வாகி கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், வானவில் மன்ற கருத்தாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News