தேனீ வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு                     

தஞ்சாவூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் தேனீ வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு முகாமை நடத்தினர்.

Update: 2024-05-20 14:04 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள செண்டாங்காடு கிராமத்தில், ஈச்சங்கோட்டை முனைவர் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் சார்பில், தேனீ வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  ஒவ்வொரு ஆண்டும், மே 20-ஆம் தேதியன்று உலக தேனீக்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு,  செண்டாங்காடு எனும் கிராமத்தில், வேளாண் கல்லூரி மாணவிகள் 'தேனீ வளர்ப்பு' குறித்த விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர். இதில் தேனீக்களின் முக்கியத்துவம் பற்றியும், விவசாயம், சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு, மகரந்தச் சேர்க்கை ஆகியவற்றில் தேனீக்களின் மற்றும்  இன்றியமையாத பங்கு, தேனீ வளர்ப்பு, தேன், மெழுகு உற்பத்தி, அதனால் கிடைக்கும் லாபம் பற்றி வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கமளித்தனர்.  இளைஞர்கள், ஊர்ப் பொதுமக்கள், விவசாயிகள் இதில் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News