அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு

தம்மம்பட்டி அருகே செங்காட்டில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-01-16 11:13 GMT

தம்மம்பட்டி அருகே செங்காட்டில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.  

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டி அருகே செங்காட்டில் மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மத்திய அரசு மூலம் மாநிலத்தில் நடைபெற்று வரும் வீட்டுக்கு வீடு குடிநீர் திட்டம், அஞ்சலக, வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வரும் காப்பீடுகள், எல்ஐசி திட்டங்கள், சுகாதார திட்டங்கள், கல்வித் துறையின் திட்டங்கள் குறித்து நடமாடும் வாகனம் மூலம் காணொலி வாயிலாக விழிப்புணர்வு குறும்படம் காண்பிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு, ஜங்கமசமுத்திரம் ஊராட்சித் தலைவர் அ.பெரியசாமி தலைமை வகித்தார்.

இந்த நிகழ்வில் வாழக்கோம்பை தலைமையாசிரியை (பொ) ராதா, சுகாதார ஆய்வாளர் ஜமால், ஜீவா உள்ளிட்ட அனைத்துத் துறையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று துறைரீதியான மத்திய அரசு திட்டங்களை விளக்கிப் பேசினர். இதில் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News