100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு!
100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;
Update: 2024-04-15 16:00 GMT
100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு இன்று (15.04.2024) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது . வான்சாகச விளையாட்டில் (பாராசூட்) பங்கேற்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.