ஆரம்ப சுகாதார நிலையத்தில் விழிப்புணர்வு முகாம்
முகையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, பால்வினை நோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
Update: 2023-12-23 09:46 GMT
முகையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, பால்வினை நோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமிற்கு, டாக்டர் சுகுமாறன் தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட மேலாளர் கவிதா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். டாக்டர்கள் வித்யாதேவி, பிரேமா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது. பின், ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் நெஞ்சுருள் வடிவில் நின்று உறுதி மொழியேற்றனர்.