கல்லடிக்குப்பத்தில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம்
Update: 2024-01-03 11:48 GMT
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வல்லம் வட்டாரம் கல்லடிக்குப்பம் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி உதவி திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு வேளாண்மை உதவி இயக்குனர் பாலமுருகன் தலைமை தாங்கி னார். முகாமில் விவசாயிகளுக்கான கவுரவ நிதி உதவி திட்டத்தில் பயன்பெற என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்றும் இந்த திட்டத்தில் சேருவதற்கான ஆவணங்கள் விவரம் மற்றும் இந்த திட்டத்தில் ஏற்கனவே சேர்ந்து நிதி உதவி நிறுத்தப்பட்ட விவசாயிகளுக்கும் இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, முன்னதாக துணை வேளாண்மை அலுவலர் கோவிந்தராஜ் கலை ஞரின் அனைத்து கிராம ஒழுங்கங்கிணைந்த வேளாண்மை அரசு திட்டம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். இதில் வேளாண்அலுவலர் கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.