வீரகனூர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு
வீரகனூர் அரசு பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-17 07:26 GMT
வீரகனூர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூர் அரசு பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு, ஆத்தூர் மதுவிலக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சென்னகேசவன் தலைமையில் போதைப்பொருள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. மது போதை பழக்கத்தினால் ஏற்படும், தீமைகள் மற்றும் உடல் நலன் சார்ந்த பக்க விளைவுகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தப்பட்டது. மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் கொடுத்தனர்.