கைத்தறி ரகங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

எடப்பாடியில் கைத்தறி துறை சார்பில் ரகங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

Update: 2024-03-09 04:48 GMT

  எடப்பாடியில் கைத்தறி துறை சார்பில் ரகங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.  

கைத்தறி துறை உதவி அமலாக்க அலுவலர் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் எடப்பாடி டெக்ஸ் சிட்டி அரிமா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் டெக்ஸ் சிட்டி அரிமா சங்க அலுவலகத்தில் சிவாஜி கணேசன் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் கைத்தறிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 11 ரகங்கள் விழிப்புணர்வு குறித்து இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் சண்முகவடிவு பேசினார் அதில் அரசு ஒதுக்கப்பட்டுள்ள 11 ரகங்களில் எந்த ரகங்களை நாம் தயாரிக்க வேண்டும் எந்த ரகங்களை தயாரிக்க கூடாது என விளக்கம் அளித்து பேசினார். 

அதனைத் தொடர்ந்து கைத்தறி அலுவலர் அமலாக்க ஆய்வாளர்கள் விஜயா ஸ்ரீ மத்திய மாநில அரசின் நலத்திட்டம் தொடர்பான பணிகளையும், ஜோதிமணி தொழிலாளர் நல வாரியம் தொடர்பான பயன்களையும் எடுத்துரைத்து பேசினர். இந்த விழிப்புணர் கூட்டத்தில் கைத்தறி விசைத்தறி ஆர்வலர்கள் ராஜி, சந்திரசேகர், ஆறுமுகம், சரவணன், வெங்கடேசன், கணேசன்,மனோகர், மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News