சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு !

இன்று பெரம்பலூர் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Update: 2024-07-04 06:40 GMT

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துணைக் காவல் கண்காணிப்பாளர் M.S.M. வளவன் கலாராணி மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் புள்ளியியல் ஆய்வாளர் சாகித் உதவி ஆய்வாளர் நடராஜன் ஆகியோர்கள் இன்று பெரம்பலூர் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய துணைக் காவல் கண்காணிப்பாளர் மாணவ மாணவியர்களிடத்தில் சமூக நீதி மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த விதிகள். 2.பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் தொடர்பான வழிப்புணர்வு 3.சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு 4.கள்ளச்சாராயம் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை உபயோகப்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் 5.பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசால் வழங்கப்படும் நலதிட்ட உதவிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Tags:    

Similar News