குமாரசாமிப்பேட்டையில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி
குமாரசாமிப்பேட்டையில் 100% வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடந்தது.
தர்மபுரி மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 ஐ முன்னிட்டு, வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில், குமாரசாமிப்பேட்டையில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணி சந்தோஷ் தியேட்டர் நான்கு ரோடு பகுதி வழியாகச் சென்று பொது மக்களிடம் வாக்காளர்கள் நூறு சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். எனது வாக்கு விற்பனைக்கு இல்லை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் காயம் வாக்களிக்க வேண்டும் வாசகங்கள் ஏந்தி விழிப்புணர்வு பேரணியில் திராளன பெண்கள் கலந்து கொண்டனர் உடன் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, வட்டாட்சியர் ஜெயசெல்வன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.