புதுக்கோட்டையில் மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி!

புதுக்கோட்டையில் மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2024-02-16 10:44 GMT


புதுக்கோட்டையில் மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நடந்தது.


பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நலனை கருத்தில் கொண்டு கள்ளச்சாராயத்திற்கு எதிராக மது அருந்துதல் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் போதைப் பொருட்களை தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு எதிராக விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரங்கள் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா துவக்கி வைத்தார்

இதில் கல்லூரி மாணவ மாணவியர் அதேபோல் என்சிசி மாணவ மாணவியர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று இளைஞர்கள் போதை பொருளை உபயோகப்படுத்தக் கூடாது அதேபோல் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் கூடாது அதே போல் போதை பொருட்களை யாரும் பயன்படுத்த கூடாது என்று கோஷம் விட்டும் மேலும் பதவிகளை ஏந்தியும் இப்பேர் அணி சென்றது இந்த பேரணியாது பழைய பேருந்து நிலையம் வழியாக கீழ ராஜ வீதி வடக்கு ராஜ வீதி வழியே சென்று நகர் மன்றத்தை அடைந்தது.

இதில் 200க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் கடல் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News