போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையத்தில் வருவாய்துறை சார்பில் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்ற, போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-03-13 09:45 GMT

நாமக்கல் மாவட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், வருவாய்த்துறை ஏற்பாட்டில் மதுபானங்கள் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களுக்கான விழிப்புணர்வு பேரணி, குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரி சார்பில் நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார். குமாரபாளையம் வட்டாட்சியர் சண்முக வேல், கிராம நிர்வாக அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் கல்லூரி மாணவ, மாணவியர் போதை பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த பதாகைகளை ஏந்தியபடி ஒழிப்போம் ஒழிப்போம் போதை பொருட்களை ஒழிப்போம் காப்போம் காப்போம் உயிர்களை காப்போம் என கோஷமிட்டபடி முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர் .

மேலும் பொது மக்களுக்கு போதை பொருட்கள் ஒழிப்பு,மற்றும் போதை பொருட்களை உட் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழி நெடுகிலும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லூரியில் இருந்து துவங்கிய பேரணி சேலம்முதன்மை ஆனங்கூர்பிரிவு சாலை மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி சாலை. ஓலப்பாளையம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று, மீண்டும் கல்லூரியில் நிறைவு பெற்றது. 600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் இந்த பேரணியில் பங்கேற்றனர்..

Tags:    

Similar News