தர்மபுரியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

தர்மபுரி 4 ரோடு பகுதியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை தர்மபுரி மாவட்ட எஸ்பி துவங்கி வைத்தார்.

Update: 2024-06-22 12:10 GMT

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை தருமபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உயிருக்கு உலை வைக்கும் புகையிலை வேண்டாம், புகை பிடிக்காதே உன் வாழ்க்கையின் புன்னகையை இழக்காதே, போதைப் பொருட்களை நாடாதே சாவை தொடாதே என்ற வாசகங்கள் அடங்கிய தட்டிகளை கையில் ஏந்தி போதைப் பொருட்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

இந்த விழிப்புணர்வு பேரணியானது தருமபுரி நான்கு ரோட்டில் இருந்து நேதாஜி பைபாஸ் சாலையில் நெசவாளர் காலனி, வள்ளலார் திடல் வழியாக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வரை சென்று முடிவு பெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் தருமபுரி டிஎஸ்பி சிவராமன், தருமபுரி நகர காவல் நிலைய ஆய்வாளர் வேலுதேவன், மதி கோன்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன், போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரகுநாதன், கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவலர்கள், கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ மாணவிகள், டான் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News