தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி!

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-01-25 07:23 GMT
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு காந்திசிலை முன்பாக நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார பேரணிக்கு தாசில்தார் சாந்தா முருகேசன் தலைமை தாங்கினார். தேர்தல் துணை வட்டாட்சியர் சேகர் முன்னிலை வகித்தார். பின்னர் தொடங்கிய தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார பேரணியை தாசில்தார் சாந்தா முருகேசன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் 50க்கு மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை, 18 வயது நிறைந்தவர்கள் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை பெற வேண்டும், தவறாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும்,கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பதாகைகளை கையிலேந்தி முக்கிய சாலை வீதியான அண்ணா சாலை, பேருந்து நிலைய வளாகம் வழியாக பேரணியாக சென்று காவல் நிலையம் அருகில் பேரணியை நிறைவு செய்தனர்.இவ்விழிப்புணர்வில் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள்,காவல்துறையினர், கிராம நிர்வாக உதவியாளர்கள் என பலர் கலந்து கொண்டு தேசிய வாக்காளர் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Tags:    

Similar News