அச்சமின்றி வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு அணிவகுப்பு

திருப்பூரில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வுக்காக பாதுகாப்பு படையினர் சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

Update: 2024-03-27 14:20 GMT

திருப்பூரில் வாக்காளர்கள் அச்சமின்றிவாக்களிப்பது குறித்த விழிப்புணர்வுக்காக காவல்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சார்பாக கொடிஅணிவகுப்பு நடைபெற்றது. தமிழகத்தின் முதல் கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இதற்காக தமிழகம் முழுவதுமே வாக்காளர்கள்அச்சமின்றி வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் மாநகர காவல் துறையின் KVR நகர் சரகத்தின் சார்பில் KVR நகர் சரக காவல் உதவி ஆணையர். நாகராஜ் தலைமையில் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கே வி ஆர் நகர் காவல் நிலையம் முன்பு துவங்கிய கொடி அணி வகுப்பு செல்லம் நகர்,பழகுடோன், கருவம்பாளையம்,மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பதட்டமான வாக்குச்சாவடி உள்ள பகுதிகளில் காவல்துறை மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் சார்பாக கொடி அணிவகுப்பு நடைபெற்றது இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வீரர்கள்இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News