தேசிய சாலை பாதுகாப்பு மாதம் குறித்த விழிப்புணர்வு பேரணி

திருப்பத்தூரில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் எஸ்.பி., ஆகியோர் துவக்கி வைத்தனர்.;

Update: 2024-02-09 12:07 GMT

திருப்பத்தூரில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் எஸ்.பி., ஆகியோர் துவக்கி வைத்தனர். 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இன்று காலை 10 மணி அளவில் திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் திருப்பத்தூர் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

Advertisement

இதில் தலைக்கவசம் அணிவது, சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவக்கி திருப்பத்தூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் கல்லூரி மாணவர்கள், காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

Tags:    

Similar News