சிவகாசியில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி
சிவகாசியில் மகளிர் குழு சார்பாக வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;
Update: 2024-03-25 14:06 GMT
சிவகாசியில் மகளிர் குழு சார்பாக வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சிவகாசியில் மகளிர் குழுவினர் சார்பாக 100 சதவீதம் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி.பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்பு.. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே 100 சதவிகித வாக்களிப்பதை வலியுறுத்தி மகளிர் குழுவினர் மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிவகாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனுப்பன்குளம் ஊராட்சியில் மகளிர் குழு சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் நான் நிச்சயம் வாக்களிப்பேன்,100 சதவீதம் வாக்களிப்போம், வாக்களிப்பது நம் கடமை என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகத்துடன் மகளிர் குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களுடன் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.பின்னர் பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கவிதாபாண்டியராஜ், துணைத்தலைவர் புஷ்பவேணி, ஊராட்சி செயலர் சத்தியாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.