சர்வதேச நெகிழிப்பை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

சர்வதேச நெகிழிப்பை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு 200 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி

Update: 2024-07-04 05:46 GMT
விருதுநகரில் சர்வதேச நெகிழிப்பை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு 200 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி -மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உலகம் முழுவதும் வருடாந்தோறும் ஜூலை மூன்றாம் தேதி நெகிழிப்பை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நெகிழிப்பை உபயோகிப்பதால் தோல் நோய், புற்றுநோய், மூச்சுக்குழல் பாதிப்பு, நரம்புத் தளர்ச்சி, போன்ற பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன. எனவே நெகிழிப்பையை ஒரு முறை மட்டுமே பயன்பத்த வேண்டும். விழிப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன அதனை ஒட்டி தமிழகத்திலும்ஜூலை மூன்றாம் தேதியை நெகிழிப்பை ஒழிப்பு தினம் கடைபிடிக்கபட்டு தமிழக அரசால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நெகிழிப்பை உபயோகித்தால் என்னென்ன தீமைகள் ஏற்படும் என்பதை குறித்து பல்வேறு விழிப்புணர்வு மற்றும் கலை நிகழ்ச்சிகளும். நடத்தப்பட்டு வருகின்றன அதனையொட்டி விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் அமைத்துள்ள தனியார் பள்ளியில் சர்வதேச நெகிழிப்பை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார் இந்த பேரணியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகள், புகை நமக்குப் பகை,பிளாஸ்டிக் ,டயர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம்,புகையில்லா போகி மாசில்லா உலகு, பயன்படுத்துவோம் பயன்படுத்துவோம் மஞ்ச பையை பயன்படுத்துவோம், புகையால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க வேண்டாம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த பேரணியில் கலந்து கொண்டனர் இந்தப் பேரணியானது ராமமூர்த்தி ரோட்டில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் ஆரம்பித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தலைமை தபால் அலுவலகம் , மற்றும் முக்கிய வீதி வழியாக வந்து மீண்டும் அதே பள்ளியில் முடிவடைந்தது
Tags:    

Similar News