வையப்பமலை கவிதா’ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

வையப்பமலை கவிதா’ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மூலம் மது மற்றும் புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2024-03-01 12:52 GMT

வையப்பமலை கவிதா’ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக மது மற்றும் புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் முனைவர் P. செந்தில்குமார் தலைமை தாங்கினார். கல்லூரியின் தலைவர் K. பழனியப்பன், துணைத்தலைவர் சரஸ்வதி அம்மாள் மற்றும் கல்லூரியின் செயலாளர் கவிதா செந்தில்குமார், முதல்வர் முனைவர். R. விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாமக்கல் மாவட்ட கோட்ட கலால் அதிகாரி S. கண்ணன், அவர்கள், மது மற்றும் புகையிலைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணக்கர்கள் சமுதாயத்தில் தங்களின் பொறுப்பை உணர்ந்து வீட்டிற்கும் நாட்டிற்கும் சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

S. சதீஷ்குமார், நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அவர்கள் ஆற்றிய உரையில், மாணக்கர்களின் முன்னேற்றம் இன்றைய நிலையில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே மாணக்கர்கள் மது மற்றும் புகையிலைக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வைத் தனது குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார். நாமக்கல் மாவட்ட மனநல மருத்துவ அதிகாரி S. அர்ச்சனா, அவர்கள், மது மற்றும் புகையிலை பயன்படுத்துவதால் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்தார்.

சமாதானம், திருச்செங்கோடு சிறப்பு உதவி ஆய்வாளர், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அவர்கள், மது மற்றும் புகையிலை விற்றல் மற்றும் உபயோகித்தல் ஆகியவற்றிற்கு விதிக்கப்படும் தண்டனைகளை எடுத்துரைத்தார். ராஜ்கமல், புகையிலை கட்டுப்பாடு திட்ட அதிகாரி அவர்கள், புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதிலிருந்து வெளிவருவதற்கான அறிவுரைகளை வழங்கினார்.

மணிக்கம்பாளையம்யம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

Tags:    

Similar News