குளிக்கச் சென்ற ஐயப்ப பக்தர் சடலமாக மீட்பு

விருதுநகர் அருகே குளிக்க சென்ற போது தண்ணீரில் அடித்து செல்லபட்ட ஐயப்ப பக்தர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-08 07:02 GMT
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே குளிக்கச் சென்ற ஐயப்ப பக்தர் சடலமாக மீட்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள குண்டாயிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் என்பவர் மனைவி ராஜம்மாள்(45) இவருக்கு இசக்கிவேல்(27) என்ற ஒரு மகனும் இரு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் இசக்கி வேல் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து கடந்த 3ம் தேதி சபரிமலைக்குச் சென்று கடந்த 5ம் தேதி திரும்பி உள்ளார். திரும்பி வந்த இசக்கி வேல் மாலையை கழட்டுவதற்காக அருகில் உள்ள குண்டாயிருப்பு தடுப்பு அணையில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது தடுப்பணையில் திடீரென நீர்வரத்து அதிகமாக இருந்ததால் இழுத்து செல்லப்பட்டுள்ளார். அப்போது இசக்கி வேலின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் ஓடி வந்து பார்த்து உறவினர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு துறையினர் வெகுநேரம் தேடியும் இசக்கி வேல் கிடைக்கவில்லை .

இதனை அடுத்துஇச்சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் இன்று குண்டாய் இருப்பு தடுப்பு அணையை அடுத்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் முட்புதரில் ஆண் சடலம் ஒன்று கிடைப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்ற மீட்புத்துறையினர் உடலை மீட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆலங்குளம் போலீசார் உடலை கைப்பற்றி நடத்திய விசாரணை இறந்த உடல் காணாமல் போன இசக்கி வேல் என்பது தெரிய வந்ததை அடுத்து அவரது உடலை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்து ஆலங்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மலைக்குச் சென்று திரும்பிய ஐயப்ப பக்தர் குளிக்கச் சென்ற இடத்தில் பிணமாக மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News